மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு, முன்னாள் சேம்பியன் அணியின் மற்றொரு அணித்தலைவரும் பொறுப்பை இழக்கக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது.
அணித்தலைவரை மாற்றும்
ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2024ல் அதன் அணித்தலைவரை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 22ம் திகதி 17வது ஐபிஎல் தொடர் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில், 2023ல் ஹைதராபாத் அணியை வழிநடத்திய Aiden Markram மாற்றப்படுவார் என்றும், அவருக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் Pat Cummins ஹைதராபாத் அணிக்கு தலைமை ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.
கம்மின்ஸின் தலைமையின் கீழ், அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒரு நாள் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலும் இந்தியாவை வீழ்த்தியது.
முக்கியமான இரண்டாவது மாற்றம்
ஹைதராபாத் தகவல் உறுதியானது என்றால், ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டில் நடக்கும் மிக முக்கியமான இரண்டாவது மாற்றம் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐந்து முறை சேம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை அணித்தலைவராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது