சிக்ஸர் அடித்து ரஞ்சிக்கோப்பையில் முதல் சதம் விளாசிய ஷர்த்துல் தாக்கூர்! டேய் போதும்டா எனக்கூறிய அஸ்வின்

89

 

ரஞ்சிக்கோப்பை தொடரின் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வீரர் ஷர்த்துல் தாக்கூர் சதம் அடித்தார்.

சாய் கிஷோர்
மும்பையில் ரஞ்சிக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக விஜய் ஷங்கர் 44 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ஓட்டங்களும் எடுத்தனர். மும்பை அணியின் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளும், ஷர்த்துல் தாக்கூர், முஷீர் கான் மற்றும் தனுஷ் கோடியான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி, சாய் கிஷோரின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் முஷீர் கான் 55 ஓட்டங்கள் எடுத்தார்.

ஷர்த்துல் தாக்கூர்
அடுத்து ஷர்த்துல் தாக்கூர் அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட அவர், 105 பந்துகளில் 109 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.

மேலும் ரஞ்சிக்கோப்பை தாக்கூர் அடித்த முதல் சதம் இதுவாகும். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 353 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

தனுஷ் கோடியான் 74 ஓட்டங்களுடனும், தேஷ்பாண்டே 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதற்கிடையில், ஷர்த்துல் தாக்கூரின் ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன ரவிச்சந்திரன் அஸ்வின், தனது எக்ஸ் பக்கத்தி ”டேய் lord beefy போதும் டா” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

SHARE