வீறுநடை போட்ட நெதர்லாந்துக்கு மரண அடி கொடுத்த நேபாளம்

102

 

நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நேபாளம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிரடிஸ் மிரட்டல் பந்துவீச்சு
முத்தரப்பு டி20 தொடரின் இன்றையப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதின.

முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. அத்துடன் நேபாள அணியின் பந்துவீச்சில் நெதர்லாந்து அணி வீரர்கள் ஓட்டங்கள் எடுக்க தடுமாறினர்.

இதனால் அந்த அணி 19.3 ஓவரில் 120 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மேக்ஸ் ஓ டௌட் 31 (24) ஓட்டங்கள் எடுத்தார். நேபாளம் அணியின் தரப்பில் பிரடிஸ் 3 விக்கெட்டுகளும், கரண் மற்றும் குஷால் மல்லா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

நேபாளம் வெற்றி
அதன் பின்னர் களமிறங்கிய நேபாளம் அணி 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் பாடேல் 34 பந்துகளில் 46 ஓட்டங்களும், குல்ஸான் ஜா 36 பந்துகளில் 38 ஓட்டங்களும் எடுத்தனர்.

தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்ற நெதர்லாந்துக்கு இந்த வெற்றி மூலம் நேபாளம் அடி கொடுத்துள்ளது. நாளை நடக்கும் போட்டியில் நெதர்லாந்து அணி நமீபியாவை எதிர்கொள்கிறது.

 

SHARE