50MP கேமரா, 120Hz Display: Realme Narzo 70 Pro இந்தியாவில் அறிமுகம்!

105

 

Realme நிறுவனம், இந்திய சந்தையில் Realme Narzo 70 Pro என்ற புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.

Realme Narzo 70 Pro
மார்ச் மாதத்தில் Realme Narzo 70 Pro ஸ்மார்ட்போன் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேமிங் ஆர்வலர்களையும், புகைப்பட ஆர்வலர்களையும் கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் நிறைந்துள்ளன.

புரொசெசர் (Processor)
இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 7 Gen 2 அல்லது MediaTek Dimensity 1080 (Qualcomm Snapdragon 7 Gen 2 or MediaTek Dimensity 1080) என இரண்டு வகையான புரொசெசர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டுமே சிறந்த செயல்திறனை வழங்கும்.

Realme Narzo 70 Pro, 50MP கேமரா, 120Hz Display: Realme Narzo 70 Pro இந்தியாவில் அறிமுகம்!

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் (RAM And Storge)
6GB முதல் 8GB வரையிலான ரேம் மற்றும் 128GB முதல் 256GB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தகவல்.

காட்சி (Display)
6.7 அங்குல 120Hz refresh ரேட் கொண்ட ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே (6.7, 120Hz refresh Full HD+ display) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா (Camera)
50MP முதன்மை கேமரா உடன் கூடிய கேமரா அமைப்பு இருக்கும் என்று தகவல். செல்பி கேமரா செல்பி 16MP அல்லது 24MP இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பற்றரி (Battery)
5000mAh பற்றரி இருக்கும் என்று தகவல். இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (33W) ஆதரவைக் கொண்டிருக்கும்.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை
ரியல்மி நார்சோ 70 ப்ரோவின் விலை ரூ. 24,990 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மார்ச் மாதத்தில் அமேசான் மூலம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE