பட்ஜெட் விலையில் இம்மாதம் வெளியாகும் Realme 12 Plus 5G., விலை விவரங்கள் இதோ

111

 

பட்ஜெட் விலையில் இம்மாதம் வெளியாகும் Realme 12 Plus 5G போனின் விவரங்களை பார்ப்போம்.

முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Realme தனது Realme 12+ 5G போனை இம்மாதம் ஆறாம் திகதி (March 06) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

Octacore MediaTek Dimension சிப் செட், Full HD+ OLED திரையுடன் கூடிய Realme 12+ 5G போன் இன்று (வெள்ளிக்கிழமை) மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் இந்த Realme 12 + 5G ஃபோன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான UI பதிப்பில் இயங்குகிறது. Realme 12+ 5G உடன், Realme 12 Pro 5G மற்றும் Realme 12 Pro + 5G ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படும்.

Realme 12+ 5G, Realme 12+ 5G price, Realme 12+ 5G specifications, Realme 12 Plus 5G, பட்ஜெட் விலையில் இம்மாதம் வெளியாகும் Realme 12 Plus 5G., விலை விவரங்கள் இதோ

Realme 12+ 5G விலை
Realme 12+ 5G ஃபோன் Navigator Beige மற்றும் Pioneer Green வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 8GB RAM கொண்ட 256GB Storage Variant-ன் விலை சுமார் ரூ.22,200 ஆகும்.

அதே சமயம் 12GB RAM மற்றும் 256GB Storage Variantன் விலை ரூ.26,200.Realme 12+ 5G அம்சங்கள்
Realme 12+ 5G ஃபோனில் 6.67-இன்ச் Full HD (2400×1080 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளே 240Hz touch sampling rate, 120Hz refresh rate ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2000 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது. மழையில் பயன்படுத்தக்கூடிய smart touch supportஉள்ளது.

Realme 12 + 5G போனில் ARM Mali G-68 MC4 GPU, MediaTek Dimension 7050 SoC சிப் செட் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 அவுட் பாக்ஸ் பதிப்பில் இயங்குகிறது.

Realme 12+ 5G Camera
Realme 12 + 5G ஃபோன் 50-மெகா பிக்சல் Sony LVT 600 முதன்மை சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன், 8-மெகா பிக்சல் சென்சார் Ultra Wide Angle Lens, 2-மெகா பிக்சல் Macro Sensor கமரா உள்ளது.

வீடியோ அழைப்புகளுக்கு, முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் கேமரா உள்ளது.

Realme 12+ 5G ஃபோன் 5000 mAh பேட்டரியுடன் 67W Super Wook Charging ஆதரவுடன் வருகிறது.

இதில் பாதுகாப்புக்காக இன்-display fingerprint sensor உள்ளது. 5G, GPS, Baidu, Galileo, QZSS, Bluetooth 5.2, USB Type-C போர்ட் போன்ற தேவியான பல அம்சங்கள் உள்ளன.

SHARE