இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலில் பலியான இந்தியர்

69

 

இஸ்ரேலில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மூலம், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் வடக்கு எல்லையையொட்டி அமைந்துள்ள மார்கோலியாட் பகுதியில் நேற்று (04.03.2024) காலை 11 மணியளவில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவரும் கேரளத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் பட்னிபின் மேக்ஸ்வெல் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகிய இருவரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் பிற நாடுகளை சேர்ந்த 7 வெளிநாட்டவர்களும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE