ஜனாதிபதி வேட்பாளராவதை நெருங்கும் டொனால்ட் ட்ரம்ப்

61

 

அமெரிக்காவின் மூன்று மாநில தேர்தல்களில் அமோக வெற்றியீட்டி இருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகுவதை நெருங்கியுள்ளார்.

குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மிசுரி, மிச்சிகன் மற்றும் இடாஹோ கோகசஸ் மாநிலத் தேர்தல்களிலேயே ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார். இந்நிலையில் இன்று ‘சுப்பர் டியுஸ்டே’ வருகிறது. 15 மாநிலங்களிலும் ஒரு வட்டாரத்திலும் தேர்தல் நடைபெறும்.

அவற்றில் வெற்றிபெற்று ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை உறுதிசெய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து நிற்கும் நிக்கி ஹேலி இதுவரை ஒரு மாநிலத்தில்கூட வெற்றி பெறவில்லை.

எனினும் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றும் தொடர்ந்து போட்டியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் (05.11.2024) ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதில் ஜனநாயக கட்சி சார்பில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிட எதிர்பார்த்துள்ளார்.

SHARE