முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்தில் பாடிய ஹாலிவுட் பாடகி Rihanna சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

81

 

இந்தியாவின் மிகவும் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானி-நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

அவரது நீண்டநாள் காதலி ராதிகா மெர்ச்சண்டுடன் தான் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

ஆனந்த் அம்பானி-ராதிகாவின் Pre Wedding கொண்டாட்டம் Jamnagarல் படு பிரம்மாண்டமாக மக்கள் ஆச்சரியப்பட்டு பார்க்கும் அளவிற்கு கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியின் வீடியோக்கள், புகைப்படங்கள் நிறைய வெளியாகிய வண்ணம் உள்ளன.

ரிஹானா சொத்து
இந்த திருமண கொண்டாட்டத்தில் எத்தனையோ பாடகர்கள் பாடினார்கள் ஆனால் ஹாலிவுட்டின் பிரபல பாடகி ரிஹானா நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்பட்டது.

9 கிராமி விருதுகள், 12 பில்போர்ட் விருதுகள், 6 கின்னல் சாதனைகளை இசை உலகில் படைத்துள்ள ரிஹானா சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் கலைஞர்களில் டாப்பில் உள்ளார்.

இசை கச்சேரி, கான்சர்ட், ஆடை நிறுவனம், விளம்பரங்கள், மாடலிங் என்று பல்வேறு வழிகளில் ரிஹானா சம்பாதித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இவரது சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே வர மொத்தமாக அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 11 ஆயிரம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

SHARE