ரூ.15,000க்கு கிடைக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்! Poco X6 Neo விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன?

104

 

Poco நிறுவனம் மலிவு விலையில் சிறந்த செயல்திறனை வழங்கும் Poco X6 Neo என்ற மாடல் ஸ்மார்ட்போனை சில வாரங்களில் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Poco X6 Neo முக்கிய அம்சங்கள்
திறன்மிக்க செயலி (Powerful Processor)
MediaTek Dimensity 8200 செயலி அல்லது Qualcomm Snapdragon 8+ Gen 1 செயலி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை இரண்டும் தற்போதைய சிறந்த கேமிங் செயலிகளில் ஒன்றாகும்.

மென்மையான திரை (Smooth Display)
120Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட 6.67 அங்குல FHD+ AMOLED திரையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கேமிங் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு சிறந்த அனுபவத்தை வழங்கும்.

நீண்ட பேட்டரி ஆயுள் (Long Battery Life)
5000mAh பேட்டரி மற்றும் 67W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் இந்த போன் வரும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது நீண்ட நேரம் கேமிங் விளையாடவும், பிற பணிகளையும் செய்யவும் உதவும்.

கேமரா(Camera)
பின்புற முதன்மை கேமரா 108 megapixel திறன் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப்போல இது Android 13 இயங்குதளையைக் கொண்டு இருக்கும் என்றும், Poco X6 Neo, 6GB முதல் 8GB வரையிலான RAM மற்றும் 128GB முதல் 256GB வரையிலான ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Poco X6 Neo – இந்தியாவில் வெளியீட்டு தேதி
Poco X6 Neo இன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இன்னும் சில வாரங்களில் இதன் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Poco X6 Neo இன் இந்திய விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் யூகங்களின் அடிப்படையில் வெளியான தகவலை அடிப்படையாக கொண்டது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விலை உறுதிப்படுத்தப்படும் வரை காத்திருப்பது நல்லது.

SHARE