சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து வெளிவரும் சர்ச்சைகளால், அவர் செய்யும் நல்ல விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. யாருக்கும் தெரியாமல் அவர் செய்யும் நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ளாமல், ஈசியாக ரஜினிகாந்த் இப்படிப்பட்டவர் தான் என கூறிவிடுகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தங்களது குடும்பத்திற்கு செய்த மாபெரும் உதவியை பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். ஹீரோவாக, முக்கிய கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் லால் சலாம் படத்தில் கூட ரஜினியின் நண்பராக நடித்திருந்தார்.
உதவிய ரஜினி
நடிகர் லிவிங்ஸ்டன் மனைவி மாரடைப்பால் உயிருக்கு போராடியுள்ளார். இதனால் லிவிங்ஸ்டன் மற்றும் அவரது பிள்ளைகள் இருவரும் வேதனையில் இருந்துள்ளனர். கையில் பணம் இல்லை, என்ன செய்வது என்று மன கஷ்டத்தில் இருந்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் உடனடியாக நடிகர் லிவிங்ஸ்டனை சந்தித்துள்ளார்.
15 லட்சம் ரூபாயை எடுத்து நடிகர் லிவிங்ஸ்டனிடம் கொடுத்துள்ளார். உடனடியாக உங்கள் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள் என்றும் கூறியுள்ளார். முதலில் பணத்தை வாங்க தங்கியுள்ளார் நடிகர் லிவிங்ஸ்டன். நான் உங்களை என்னுடைய சகோதரனாக பார்க்கிறேன் என ரஜினிகாந்த் கூறிய பிறகு, அந்த பணத்தை வாங்கி மனைவியின் உயிரை காப்பாற்றியுள்ளார் லிவிங்ஸ்டன்.
இதுமட்டுமின்றி, இன்னும் பணம் வேண்டும் என்றாலும், கேளுங்கள் தருகிறேன் என ரஜினி கூறினாராம். இன்று தனது மனைவி உயிருடன் இருக்க ரஜினிகாந்த் தான் காரணம், அவருடைய போட்டோ எங்களுடைய வீட்டின் பூஜை அறையில் இருக்கிறது என நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.