கமலுடன் ஒரே ஒரு திரைப்படம், சினிமாவில் இருந்து காணாமல் போன குணா பட நடிகை.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..

82

 

சமீபத்தில் மலையாளத்தில் இருந்து வெளிவந்து கலக்கி கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்தில் கமலின் குணா படத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் தற்போது ரசிகர்கள் குணா படத்தை கொண்டாட துவங்கியுள்ளனர்.

அதே போல் குணா படம் குறித்து விஷயங்களும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், குணா படத்தில் நடித்த நடிகை தற்போது எங்கு, எப்படி இருக்கிறார் என கேள்வியும் எழுந்துள்ளது.

சந்தான பாரதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் குணாவின் அபிராமியாக கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், நடிகை ரோஷினி. இவர் நடித்தது ஒரே ஒரு திரைப்படம் மட்டும் தான். அது குணா படம் மட்டுமே. அதன்பின் அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

இப்போது என்ன செய்கிறார்
இந்நிலையில், கமலுடன் ஒரே ஒரு திரைப்படம் நடித்துவிட்டு, அதன்பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் நடிகை ரோஷினி தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா. நடிகை ரோஷினி தற்போது சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, USA-வில் செட்டிலாகிவிட்டாராம்.

திருமணத்திற்கு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்ட நடிகை ரோஷினிக்கு, நடிப்பதில் விருப்பம் இல்லாத காரணத்தில் தான், குணா படத்திற்கு பின் வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை என அப்படத்தின் இயக்குனர் சந்தான பாரதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

SHARE