நடிகர் விஜய் அதிகமாக ஜோடி சேர்ந்த நடித்த நடிகைகளில் ஒருவர் திரிஷா. கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி மற்றும் லியோ என இதுவரை விஜய்யுடன் இணைந்து ஐந்து படங்களில் நடித்துள்ளார்.
இதில் குருவி படத்திற்கு பின் கிட்டதட்ட 14 ஆண்டுகள் கழித்து விஜய் – திரிஷா இணைந்து நடித்த திரைப்படம் தான் லியோ. இவர்கள் இருவர் குறித்து சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
மனம் திறந்த திரிஷா
இந்நிலையில், நடிகை திரிஷா கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் விஜய் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, “நானும் விஜய்யும் இதுவரை பல படங்களில் இணைந்து நடித்து இருக்கிறோம். ஆனால், கில்லி படத்திற்கு முன் நாங்கள் இப்படி இல்லை. அனைவரும் கூறுவது போல் விஜய் மிகவும் அமைதியான ஒரு நபர். கில்லி படத்திற்க்கு பின் தான் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம்” என கூறினார் திரிஷா.
பொன்னியின் செல்வன், லியோ படங்களை தொடர்ந்து விடாமுயர்ச்சி படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார் திரிஷா. இதுமட்டுமின்றி தெலுங்கில் இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து இன்று வரை முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, 40 வயதில் கூட பிசியாக நடிகையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.