கனடாவில் தூக்க கோளாறுக்கு சிகிச்சை பெற சென்ற பெண் மீது துஸ்பிரயோகம்

90

 

கனடாவில் தூக்க கோளாறு நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்ற பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றிய பணியாளர் ஒருவர் இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

டர்ஹம் பிராந்திய பொலிஸாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்காப்றோவின் ஒஷாவா தூக்க கோளாறு சிகிச்சை நிலையத்திற்கு சென்ற பெண்ணே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் நோயாளியிடம் தகாத வார்த்தைகளை பேசியதாகவும் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்காப்றோவைச் சேர்ந்த 51 வயதான சன்தார் ஹக் என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளதாகவும், வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE