நடிகையுடன் மேக்கப் ரூமில் இருந்த கமல் ஹாசன்.. கெஞ்சிய முதல் மனைவி வாணி கணபதி

83

 

நடிகர் கமல் ஹாசன் 1978ல் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்தார். இதன்பின் அவரை விவாகரத்து செய்து 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதை நாம் அறிவோம்.

வாணி கணபதியை விவாகரத்து செய்வதற்கு முன்பே, நடிகை சரிகாவுடன் கமல் ஹாசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் மனைவியான வாணி கணபதி கமல் மீது வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த விஷயத்தை கமலின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான சந்தான பாரதியிடம் கூறி, ‘உங்க நண்பர் கிட்ட கொஞ்சம் சொல்லுங்க, அவர் பண்றது சரியில்லை என்று’ என கூறியுள்ளார் வாணி கணபதி.

நடிகையுடன் மேக்கப் ரூமில் இருந்த கமல் ஹாசன்
இதன்பின் கமலின் அண்ணன் சந்திர ஹாசன் மற்றும் சந்தான பாரதி இருவரும் இணைந்து கமலை சந்தித்து, இந்த விஷயம் குறித்து பேச சென்றுள்ளனர். அப்போது கமல் இருவரையும் மேக்கப் போடும் ரூமுக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த ரூம் உள்ளே சென்றதும், அங்கு கமலுடன் சரிகா இருப்பதை சந்தான பாரதி அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.

நாம் என்ன பேச வந்தோம், ஆனால் இங்கு நிலைமை வேறு மாதிரி இருக்கே என, வாணி கணபதிக்காக பேச வந்த சந்தான பாரதி, சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமலேயே சென்றுவிட்டாராம்.

இதன்பின் பெரிய பிரச்சனை எல்லாம் நடந்து சரிகாவை கமல் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். நான் எப்போதுமே என் நண்பர் கமல் பக்கம் தான், என் நண்பனை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது என சந்தான பாரதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

SHARE