தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது இந்தியளவிலும் பிரபலமாகிவிட்டார். பாலிவுட்டில் தற்போது உருவாகி வரும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
பல லட்சம் ரசிகர்களை கொண்டு, தனக்கென்று தனி இடத்தை சினிமாவில் பிடித்திருக்கும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
சொத்து மதிப்பு
தென்னிந்திய சினிமாவின் ராணி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 101 கோடி இருக்குமாம்.
பிரம்மாண்ட வீடு
நடிகை சமந்தாவிற்கு மொத்த மூன்று வீடுகள் உள்ளது. இதில் ஹைதராபாத்தில் இருக்கும் சமந்தாவின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 100 கோடி என கூறப்படுகிறது.
அதே போல் ஹைதராபாத்தில் உள்ள 3BHK பிளாட் விலை ரூ. 7.8 கோடி இருக்குமாம். மேலும் மும்பையில் சமந்தா வாங்கியுள்ள 3BHK வீட்டின் விலை ரூ. 15 கோடியாகும்.
சம்பளம்
நடிகை சமந்தா ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 7 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். இந்தியில் உருவாகி வரும் வெப் தொடரில் நடிப்பதற்காக ரூ. 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
விளம்பர படங்கள் மூலம் நடிகை சமந்தா ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம். அதே போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிடும் பதிவுகளுக்கு ரூ. 20 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது என்கின்றனர்.
பிசினஸ்
Saaki எனும் ஆடை பிசினஸ் சொந்தமாக செய்து வருகிறார். மேலும் SustainKart நிறுவனத்தில் Angel Invester ஆக இருக்கிறார் சமந்தா. இதுமட்டுமின்றி Nourish You India எனும் கம்பெனியில் ரூ. 16 கோடி வரை முதலீடு செய்துள்ளாராம்.
சமந்தா பயன்படுத்தும் கார்கள்
Jaguar XF – ரூ. 76 லட்சம்
Porsche Cayenne – ரூ. 1.40 கோடி
BMW 7 Series – ரூ. 1.42 கோடி
Audi Q7 – ரூ. 94 லட்சம்
I.R RR 3.0 vogue – ரூ. 2.26 கோடி
Benz G 63 AMG – ரூ. 2.55 கோடி