தமிழ் நாட்டில் ரஜினியின் படத்தை பின்னுக்கு தள்ளிய மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ்.. வசூல் சாதனை

82

 

சமீபத்தில் வெளிவந்து தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். உண்மையாக நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

கமல் ஹாசன், தனுஷ், விக்ரம் என தொடர்ந்து பல தமிழ் திரையுலக பிரபலங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டினார் என கூறப்படுகிறது.

உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழில் வெளியாகும் படங்களுக்கு கூட சில சமயங்களில் கிடைக்காத வரவேற்பு, மலையாள திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

வசூல்
இதன்மூலம், தமிழ் ரசிகர்கள் நல்ல கதைகளை என்றுமே கொண்டாடுவார்கள் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்ததன் மூலம் ரஜினியின் லால் சலாம் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படம் தமிழ்நாட்டில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்திருந்தது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் தமிழக மக்களின் பேராதரவை பெற்று ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து லால் சலாம் படத்தை வசூல் ரீதியாக பின்னுக்கு தள்ளியுள்ளது.

SHARE