இலங்கைக்கு அதிர்ச்சி! 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி

91

 

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலக்கை நிர்ணயித்த இலங்கை
பங்களாதேஷின் சில்ஹெட்(Sylhet) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணியில் அதிகப்பட்சமாக குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 36 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ்(Kamindu Mendis) 37 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் குவித்தது.

அசத்தல் வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணி
இதையடுத்து வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ்(Litton Das) 36 ஓட்டங்களையும், சௌம்யா சர்க்கார்(Soumya Sarkar) 26 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.

2வது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ(Najmul Hossain Shanto) 38 பந்துகளில் 53 ஓட்டங்களை குவித்து அசத்தினார்.

இதன் மூலம் வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.1 ஓவர்கள் முடிவிலேயே 170 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் வங்கதேச அணி சமன் செய்துள்ளது.

SHARE