இஸ்ரேல்- காசாவை தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது.
இதனால் தற்போது யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லெபனான் மீதான தாக்குதலின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இன்று 4 வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியாகும்.
இந்த இடம் தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடத்தை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது.
இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் என்பது நடந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.