நடிகை ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

82

 

உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மணி ரத்னம் இயக்கத்தில் அறிமுகமான இவர், அதன்பின் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்.

தொடர்ந்து பல இந்தியில் திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், தமிழில் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியளவில் கொண்டாடப்பட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் முழு சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

சொத்து மதிப்பு
50 வயதிலும் குறையாத அழகுடன் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 760 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம்
இவர் படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் விளம்பர படங்களில் நடிக்க ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

வீடு
நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மும்பை வீட்டின் விலை ரூ. 21 கோடி இருக்குமாம். அதே போல் ஐஸ்வர்யா ராய்க்கு சொந்தமான மற்றொரு அபார்ட்மெண்ட்டின் விலை ரூ. 41 கோடி என தகவல் கூறுகின்றன. மேலும் துபாயில் இருக்கும் பிரம்மாண்ட பங்களாவின் விலை ரூ. 60 கோடி இருக்கும் என்கின்றனர்.

கார்கள்
Rolls Royce Ghost – ரூ. 7.95 கோடி

Lexus LX 570 – ரூ. 2.33 கோடி

Audi A8 L – ரூ. 1.56 கோடி

SHARE