பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கதையின் நாயகி பாக்கியா கஷ்ட்டப்பட்டு தனது ரெஸ்டாரண்ட் டை திறந்துவிட்டார். இது நடக்க கூடாது என கோபி சில சதிகளை செய்தும், ஒன்றும் நடக்கவில்லை.
ராதிகாவிடம் அடிவாங்கிய கோபி
ரெஸ்டாரண்ட் திறப்பு விழா முடிந்தபின், வீட்டிற்கு வந்த கோபியிடம், பாக்கியாவின் ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு போனது குறித்து கோபியிடம் புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறார் ராதிகா.
அப்போது ராதிகாவிடம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் கோபியை, நன்றாக அடித்து துவைக்கிறார் ராதிகா. இதை ரூமுக்கு வெளியே நின்று கேட்கும், இனியா சங்கடத்துடன் இதை பற்றி அனைவரிடமும் கூறுகிறார்.
பின் ராதிகாவிடம், கோபியின் தாய் ஈஸ்வரி ஏன் என்னுடைய மகனுடன் சண்டை போட்டுக்கிட்டே இருக்க என கேட்க, நீங்க உங்க கணவருடன் போடும் சண்டையை விட இது ஒன்னும் பெரிதல்ல என கூறுகிறார் ராதிகா. இதுதான் அடுத்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கப்போவதாக ப்ரோமோ வீடியோவில் காட்டியுள்ளனர்.