சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் இவர் அர்ச்சனாவுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவிடம் தொடர்ந்து பல கேள்விகளை முன் வைத்தார் அர்ச்சனா.
இதில் பேசி கொண்டிருந்த பிரியங்கா, ரசிகர் ஒருவர் தன்னை தரைகுறைவான வார்த்தையை பயன்படுத்தி திட்டிய சம்பவத்தை குறித்து பேசினார்.
கெட்ட வார்த்தை பேசிய பிரியங்கா
பிரியங்கா கூறியதாவது “மிகப்பெரிய தலைவர் ஒருவர் மரணமடைந்து இருந்தார். அப்போது என்னுடைய Youtube சேனலில் நான் வீடியோ போட்டு இருந்தேன். அப்போது ஒருவர் எனது வீடியோ கீழே ‘எவ்வளவு பெரிய தலைவர் இறந்து இருக்கார், பு*** வீடியோ போட்ருக்கா பாரு’ என அசிங்கமாக பேசினார். இதை பார்த்த மற்றொரு ரசிகர், பிரியங்காவிற்கு ஆதரவாக ‘ஏண்டா, இவ்வளவு பெரிய தலைவர் இறந்து இருக்கார் பு*** நீ கமெண்ட் போடுறீயா’ என கேட்டு இருந்தார். பல லட்சம் பேர் பார்க்கும் அந்த நிகழ்ச்சியின் பிரியங்கா கெட்ட வார்த்தை பேசிய பெரும் வைரலாகி வருகிறது.
தன்னை பற்றி மோசமாக பேசி ஆனந்த் கொள்பவர் மத்தியில், தனக்காக பேசும் ரசிகர்களும் எனக்கு இருக்கிறார்கள் என மகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் கூறினார் தொகுப்பாளினி பிரியங்கா.