சிக்ஸர் மழைபொழிந்து 55 பந்தில் 86 ரன் விளாசல்! ருத்ர தாண்டவமாடிய இலங்கை வீரர்

79

 

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடைசி டி20 போட்டி
இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.

தொடக்க வீரர் தனஞ்செய டி சில்வா 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கமிந்து மெண்டிஸ் 12 ஓட்டங்களிலும், அணித்தலைவர் ஹசரங்கா 15 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

குசால் மெண்டிஸ்
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டார். மொத்தம் 55 பந்துகளை எதிர்கொண்ட அவர், 6 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார்.

ஷானகா அதிரடியாக 9 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 19 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் குவித்தது.

வங்கதேச தரப்பில் ரிஷாட் ஹொசைன், தஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தபிஷுர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

SHARE