112 ஆண்டுகால சரித்திர வெற்றி பெற்ற இந்தியா! மனமார வாழ்த்திய பாகிஸ்தான் வீரர்

93

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தரம்சாலாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என பலரும் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று 4-1 என கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்! துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டு இன்னிங்சிலும் அஸ்வினின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் முதல் சதங்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. நல்லது!” என வாழ்த்தியுள்ளார்.

SHARE