நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா-சீனா கூட்டு திட்டம்

109

 

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா மற்றும் சீனா திட்டமிட்டுள்ளன.

நிலவில் எதிர்காலத்தில் குடியிருப்பு ஏற்படுத்தினால், அங்கு எரிசக்தி பிரச்னை ஏற்படாது என்ற எண்ணத்தில் ரஷ்யாவும், சீனாவும் இணைந்து திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இரு நாடுகளும் இணைந்து 2035-ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்க தயாராகி வருகின்றனர்.

இந்த திட்டம் செயற்கைக்கோளில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ரோஸ்கோஸ்மோஸ்’ தலைவர் யூரி போரிசோவ் கூறினார்.

இந்தத் திட்டம் விண்வெளி ஆய்வில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது.

இதனிடையே, 2030ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு முதல் சீன விண்வெளி வீரரை அனுப்பும் திட்டத்தை சீனா இணையாக முயற்சித்து வருகிறது.

SHARE