சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு சென்ற ஐவர் சடலங்களாக…

104

 

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போன ஐவர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிஸார் இன்று (11) தெரிவித்துள்ளனர்.

இத்தாலியுடனான எல்லைக்கு அருகிலுள்ள, பிரசித்திபெற்ற மெட்டர்ஹோர்ன் மலைப்பகுதிதியில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் 6 பேர் காணாமல் போயிருந்தனர்.

அவர்களை கண்டுபிடிப்பதற்காக தேடுதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த பொலிஸார் மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதையோ அவர்களின் வேறு அடையாளங்களையோ அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.

SHARE