தென்கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் 4 பேர் பலி

85

 

தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் 7 இந்தோனேசிய மீனவர்கள் உள்பட பலர் மீன்பிடித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு ராட்சத அலை எழும்பியதில் அந்த மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தென்கொரிய கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்ததில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மற்றொரு படகு மூலம் அவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

மயங்கிய நிலையில் இருந்த அந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 5 மீனவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

6 ஹெலிகாப்டர் மற்றும் 12 ரோந்து படகுகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

SHARE