மீண்டும் வரப்போகிறது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோ- வெளிவந்த கலகல புரொமோ

100

 

சன், விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், ஜெயா, ராஜ் என தமிழில் ஏகப்பட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.

இதில் மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன ஒரு டிவி என்றால் அது விஜய் தான்.

பாடல், நடனம், கேம் ஷோ என நிறைய சூப்பரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவையும் பெற்றது. தற்போது நாம் கொண்டாடிய ஜோடி புதிய நிகழ்ச்சி அண்மையில் தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வாரா வாரம் வித்தியாசமான தலைப்பு நடுவர்கள் கொடுக்க போட்டியாளர்களும் அதில் கலக்கி வருகிறார்கள்.

புதிய ஷோ
கடந்த சில வாரங்களாக விஜய் டிவியின் இன்னொரு சூப்பர் ஹிட் ஷோ வரப்போவதாக செய்திகள் அடிபட்டது. அதன்படி தற்போது மாகாபா இடம்பெற புதிய ஷோவின் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புரொமோவை பார்க்கும் போது சிவகார்த்திகேயன், மாகாபா தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சி வரப்போவது தெரிகிறது. இதோ அந்த புரொமோ,

 

SHARE