ரஜினி, தனுஷ் படங்களை பின்னுக்கு தள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ்.. வசூல் விவரம்

83

 

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தற்போது மாஸ் காட்டி வரும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கத்தில் உருவான இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படம், சில தினங்களுக்கு முன் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், தமிழகத்தில் மட்டுமே இதுவரை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 50 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரஜினியின் லால் சலாம் படத்தின் தமிழக வசூலை பின்னுக்கு தள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ், திரைப்படம் தற்போது தனுஷின் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தின் தமிழக வசூலையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE