கர்ப்பமாக இருக்கும் அமலா பால் செய்த விஷயம்.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

87

 

நடிகை அமலா பால் கடந்த வருடம் அவரது காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதன் பின் ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அவர்.

அதன் பிறகு அமலா பால் கர்ப்ப காலத்தில் செய்யும் எல்லா விஷயங்களையும் போட்டோவாக வெளியிட்டு வருகிறார்.

பட ப்ரோமோஷனில் அமலா பால்
இந்நிலையில் தற்போது அமலா பால் பிரித்விராஜ் உடன் நடித்து இருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டிருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கணவர் உடன் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பாராட்டு குவிந்து வருகிறது. நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் ப்ரோமோஷனுக்கு வருவதையே முழுமையாக தவிர்த்துவிடும் நிலையில், கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் வந்த அமலா பாலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE