சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைவர் ரோகித் சர்மா? – அம்பத்தி ராயுடு

99

 

2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடர் போட்டி நடைபெறவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைவராக ரோகித் சர்மா இருக்க வேண்டும் என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

IPL 2024
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுவதால் திகதிகள் மற்றும் இடங்கள் குறித்து பல வாரங்களாக சந்தேகங்கள் இருந்தன.

பின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இறுதியாக ஒரு தீர்வை எடுத்து, முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரோகித் சர்மா தலைவராக இருக்க வேண்டும் என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

CSK தலைவர் ரோகித் சர்மா?
ரோஹித் சர்மா விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புவதாக ராயுடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடினார். அதுப்போலவே சென்னை அணிக்காகவும் விளையாடி வெற்றியை அள்ளிதர வேண்டும்.

எம்.எஸ். தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற்றால் ரோகித் சர்மா சென்னை அணியின் தலைவர் பதவியை வகிக்கலாம். அணியை வழி நடத்த விரும்புகிறாரா? இல்லையா? என்பது அவரது முடிவு.

மேலும் நீண்ட காலமாக முழங்கால் வலியால் M.S தோனி பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

இந்நிலையில் இவ்வாண்டு கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் சென்னை அணியை கடுமையாக உழைத்து வழிநடத்தி வருகிறார்.

SHARE