இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவடைகிறது

97

 

பால்மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால்மா இறக்குமதி குறித்து இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 – 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தெரவித்துள்ளார்.

விலைக்குறைப்பு
அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வருமென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பால்மாவின் விலை ஒரு கிலோ 2700 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE