அமெரிக்காவில் இறைச்சி உற்பத்தி தொடர்பிலான நடைமுறை குறித்து கனடா அதிருப்தி

83

 

அமெரிக்கரிவல் இறைச்சி உற்பத்தி தொடர்பில் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறித்து கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

“அமெரிக்காவின் உற்பத்தி” மற்றும் “அமெரிக்காவின் தயாரிப்பு” போன்ற லேபல்களுடன் மட்டுமே இறைச்சி மற்றும் முட்டை வகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் 2026ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அமெரிக்காவிலேயே பிறந்து அமெரிக்காவிலேயே வளர்ந்த மிருகங்களின் இறைச்சி உற்பத்திகளை மட்டும் விற்பனை செய்யவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க விவசாய திணைக்களம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

எனினும்,இந்த திட்டத்திற்கு கனடிய அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கனடிய விவசாய அமைச்சர் லோரன்ஸ் மெக்யூலி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி நெக் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த நடைமுறை குறித்த அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த நடைமுறையானது இரு நாடுகளினதும் வர்த்தக உறவுகளை பாதிக்கும் வகையிலானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்க மற்றும் கனடிய இறைச்சி, கால்நடை துறைகள் இணைந்து செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய நடைமுறையானது விநியோகச் சங்கிலியை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE