திடீரென எழுந்த கரும்புகை… கீழே விழுந்து நொறுங்கிய விமானம்! 15 பேருக்கு நேர்ந்த நிலை?

88

 

ரஷ்யாவின் மேற்கு பகுதியில் ராணுவ போக்குவரத்து விமானம் இன்றையதினம் (12-03-2024) விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விமானப்படை தளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில வினாடிகளில், அதன் என்ஜினில் இருந்து கரும்புகை எழுந்த நிலையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தின் போது குறித்த விமானத்தில் 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணித்துள்ளனர்.

இவானோவா பிராந்தியத்தில் விமானம் விழுந்ததாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானம் புறப்படும்போது என்ஜினில் தீப்பற்றியதுதான் விபத்துக்கு காரணம் என்றும் கூறியுள்ளது.

விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE