சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் சீசன் முடிவை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலில் ஸ்டாலின், பிரபல நடிகை நிரோஷா போன்ற நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
டாப் நடிகருடன் சந்திப்பு
இந்த சீரியலில் கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் ஆகாஷ். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கார்த்திக்குடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பும், நடிகர் கார்த்தியின் படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்த நிலையில், அப்போது அவரை சந்தித்து இந்த புகைப்படத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.