நடிகை மீனாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

79

 

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி அதன்பின் கதாநாயகியாக அறிமுகமானவர் மீனா. 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித், சத்யராஜ், அர்ஜுன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்த தம்பதிக்கு நைனிகா என ஒரு மகள் இருக்கிறார் என்பதை அறிவோம். தனது தாய் மீனா போலவே அவரும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே விஜய்யுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றார் நைனிகா.

திருமண புகைப்படம்
மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், நடிகை மீனா – வித்யாசாகர் ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE