நாளை அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.. விடாமுயற்சி பற்றி பெரிய அப்டேட்

72

 

அஜித் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருப்பது விடாமுயற்சி பட அப்டேட்டுக்காக தான். அஜித் இந்த படத்தில் நடிப்பதாக டைட்டில் அறிவிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிறது, ஆனால் இன்னும் எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லையே என அஜித் ரசிகர்கள் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர்.

மேலும் சமீபத்தில் அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் விடாமுயற்சி அடுத்த கட்ட ஷூட்டிங் நடப்பது இன்னும் தள்ளிபோகுமா என அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

நாளை வரும் அப்டேட்?
அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாளை அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் வர போகிறதாம்.

ஆம்.. விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வரலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

SHARE