கடவுள் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார்! அவரால் உயிர் பிழைத்தேன் – ரிஷப் பண்ட்

92

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கினார். இதனைத்தொடர்ந்து, கடந்த 4 மாதங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல் தகுதியை மீட்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அவர், வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில், அவர் விக்கெட் கீப்பராக கூட களமிறங்கலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் அவர், டெல்லி கேப்பிட்டல் அணியின் பயிற்சி முகாமில் பங்கு பெறவுள்ளார்.

அவர் பேசியது
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிஷப் பண்ட் கூறுகையில், “உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பின்னர், BCCI தனக்கு அனுமதி வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒரு நிகழ்வுக்காக நீண்ட நாள்கள் காத்திருந்தேன்.

நான் அதற்காக உடல் அளவில் பிட்டாக வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் உணவில் தனி கவனம் செலுத்தினேன். என்னுடைய முழு குழுவும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர்.

அதன் பின்னர் கடின உடற்பயிற்சி மேற்கொண்டேன். இந்த விபத்திற்கு பிறகு என்னால் செய்ய முடிந்த சின்ன விடயத்திற்கு கூட நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தேன் என்றால் கடவுள் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார்.

தற்போது, 14 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட போகிறேன். நான் முதலில் ஐசிசி உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னால் முடியவில்லை.

அதன் பின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால், ஜெய்ஷா மற்றும் பிசிசிஐயில் உள்ள சில நிர்வாகிகள் என்னை பொறுமையாகவே திரும்பி வாருங்கள், அவசரம் வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

ஜெய்ஷா போன்றவர் நம்மிடம் அக்கறை கொண்டால் நிச்சயம் அது ஒரு பெரிய துணையாக நமக்கு அமையும். நான் பெங்களூருவில் வீடு எடுத்து தங்க பிசிசிஐ தான் ஏற்பாடு செய்து கொடுத்தது. எனக்கு ஐபிஎல்லில் விளையாட இலக்கு இல்லை. என்னை பொறுத்தவரை களத்தில் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும்” என்றார்.

SHARE