Electric Scooters வாங்கினால் ரூ.40000 நிதியுதவி கிடைக்கும்.., எங்கு தெரியுமா?

108

 

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) வாங்கும் தொழிலாளர்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு 40 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்யும் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்கள் தான். இதனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புகிறது.

ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலையை விட எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை வாங்குவதற்கு யோசிக்கின்றனர்.

இதனை தவிர்ப்பதற்காகவே மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தொழிலாளர்களுக்கு சிறப்பான அறிவிப்பு ஒன்றை மத்திய பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது.

ரூ.40,000 பண உதவி
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) வாங்கும் தொழிலாளர்களுக்கு ரூ.40,000 பண உதவியை மத்திய பிரதேச மாநில அரசு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. தற்போது, மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிட்டதால் பாஜகவிற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE