கனடாவில் முன்கூட்டியே கனவு கண்ட மகள், தந்தைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

108

 

கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார்.

கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு லட்சம் டொலர்களை பரிசாக வென்றுள்ளார்.

கெரி டோலா என்பவர் லொட்டோ மெக்ஸ் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.

பரிசு வெற்றி குறித்த சந்தேகம் காரணமாக தாம் 13 தடவைகள் லொத்தர் சீட்டை ஸ்கேன் செய்து உறுதி செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

18 வயது முதல் இடைக்கிடை லொத்தர் சீட்டு கொள்வனவு செய்யும் பழக்கம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

லொத்தர் சீட்டில் பரிசு வென்றெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தனது மகள் லொத்தர் சீட்டில் பரிசு வென்றமை குறித்து கனவு கண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லொத்தர் சீட்டு பரிசு குறித்து குடும்பத்திடம் கூறிய போது, தமது கனவு நனவதாக மகள் பெருமிதம் கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடுவதாகவும், சில முதலீடுகளை செய்வதிலும் கவனம் செலுத்த உள்ளதாகவும் டோலே தெரிவித்துள்ளார்.

SHARE