ஹெய்ட்டிக்கான தூதரக பணியாளர்களை அவசரமாக மீள அழைக்கும் கனடா

84

 

ஹெய்ட்டியில் கடமையில் ஈடுபட்டுள்ள தமது தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

தூதரகத்தில் இன்றியமையா பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட உள்ளனர்.

எனினும், ஹெய்ட்டி வாழ் கனடியர்களுக்கு தொடர்ந்தும் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால அடிப்படையில் ஹெய்ட்டி மக்களுக்கு கனடா உதவிகளை வழங்கும் என அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.எனினும் முதலில் கனடியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹெய்ட்டியில் இடம்பெற்று வரும் கோஷ்டி மோதல்கள் காரணமாக பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு தூதரக பணியாளர்கள் மீள அழைக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டியில் சுமார் மூவாயிரம் கனடியர்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.ஹெய்ட்டியில் நிலவி வரும் நெருக்கடிகள் காரணமாக கனடிய அரசாங்கம் ஏற்கனவே பயண அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

SHARE