பிரித்தானிய இளவரசர் மனைவி கேத் மிடல்டன் எங்கே? வைரலாகும் ஹேஷ்டேக்!

87

 

பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதன்பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

இதையடுத்து அவரது உடல்நிலை தொடர்பில் வதந்தி பரவியது. இதனால் கடந்த 10 ம் திகதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.

எனினும், குறித்த புகைப்படம் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ‘கேத் மிடில்டன் எங்கே?’ என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது.

பலர் கேத் மிடில்டனுக்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

SHARE