சிறுவயதில் நாம் பார்த்து ரசித்த ஜாக்கி சானா இது?- லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் கவலை

84

 

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜாக்கி சானை அறிமுகப்படுத்தியதே விஜய் டிவி எனலாம்.

காரணம் அதிரடி திருவிழா என ஜாக்கி சான் நடித்த படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு வந்தனர். எப்படி இவர் இதையெல்லாம் செய்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இவரது சண்டைக் காட்சிகள் இருக்கும்.

ஆரம்பத்தில் புரூஸ் லீ நடிப்பில் வெளியான படங்களில் துணை நடிகராக நடிக்கத் தொடங்கிய ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்கி சான் அதன்பின்னர் ஹீரோவாகவும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் கலக்கினார்.

சீனா முதல் ஹாலிவுட் வரை தனது ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த நடிப்புத் திறமையால் உலக சூப்பர் ஸ்டாராக மாறினார்.

லேட்டஸ்ட் போட்டோ
1954ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் எனும் இடத்தில் பிறந்தவர் தான் ஜாக்கி சான்.

69 வயதை கடந்து அடுத்த மாதம் வந்தால் 70 வயதை தொடும் நிலையில், ஜாக்கி சானின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் முக்கியமாக 90களின் ரசிகர்கள் நாம் சிறுவயதில் பார்த்து ரசித்த ஜாக்கி சானா இது என கடும் வருத்தத்தில் உள்ளனர்.

SHARE