இலங்கையில் மொத்தமாக அனைத்து சிறைச்சாலைகளிலும் 30800 கைதிகள்

79

 

கைதிகளின் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் மொத்தமாக அனைத்து சிறைச்சாலைகளிலும் 30800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி டி திஸாநாயக்க இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.

கைதிகள் இடமாற்றம்
கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய சிறைச்சாலைகளுடன் ஒப்பீடு செய்யும் போது கைதிகளின் எண்ணிக்கை 300 வீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை, ஹொரண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக நிர்மானிக்கப்படும் சிறைச்சாலையில் பத்தாயிரம் கைதிகளை தடுத்து வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE