பாதுகாப்புக்கு ரூ. 4,984 கோடி செலவிடுகிறது பிரேசில்

605

fifa cup

உலக கோப்பை கால்பந்து தொடரின் பாதுகாப்புக்கு மட்டும் ரூ., 4,984 கோடி செலவிடப்படுகிறது.

பிரேசிலில் 20 வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடக்கிறது. இங்கு அவ்வப்போது கலவரம் நடப்பதால், போட்டியை காணவரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பெரும் சிக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது.

இதையடுத்து, பாதுகாப்பை கெடுபிடிகளை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொத்தம் 1,57,000 போலீசார், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக மட்டும் ரூ. 4,984 கோடி செலவிடப்படுகிறது. இந்தப் பணம் ரோந்து வாகனங்கள், விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்கவும், பயங்கரவாதத்தை தடுப்பதற்குத் தேவையான ‘ஸ்பெஷல்’ பயிற்சிகளுக்கும் செலவிடப்படுகிறது.

SHARE