சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படம் மாபெரும் வெற்றியடைந்து விட்டாலே, தங்களது சம்பளத்தை கோடியில் உயர்த்தி விடுகிறார்கள். ஆனால், ரஜினி – கமல் காலகட்டத்தில் அப்படி கிடையாது.
1 கோடி ரூபாய் சம்பளம் என்பது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இன்று ரூ. 100 கோடி, ரூ. 150 கோடியில் சம்பளம் வாங்கி வரும் ரஜினி, கமல் அன்று ரூ. 1 கோடி சம்பளம் வாங்க பல வருடங்கள் ஆனது.
ஆனால், அவர்களுக்கு முன் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி மாஸ் காட்டினார் நடிகர் ராஜ்கிரண். அவருக்கு பிறகு தான் ரஜினி, கமல் எல்லாம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்க துவங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை
சரி நடிகர்களில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியவர் ராஜ்கிரண். ஆனால் நடிகைகளில் ரூ. 1 கோடி முதன் முதலில் சம்பளம் வாங்கியது யார் தெரியுமா. வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீ தேவி தான். ஆம், இந்திய சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி தான் நடித்த முதல் ரூபாய் ஐந்து ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து சினிமாவின் உச்சத்திற்கு வந்த ஸ்ரீ தேவி, தான் நடித்த ஒரு இந்தி படத்திற்காக ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இதன்மூலம் இந்திய சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.