சீனா – சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஒன்றில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென பரவியது.
இந்த தீ விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2024) மாலை பைசி என்ற கிராமத்தின் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தீ வேகமாக பரவி வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள சுமார் 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் உதவியுடன் தீயணைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த காட்டுத்தீயால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.