இத்தாலியில் சிக்கலை எதிர்கொண்டுள்ள இலங்கையர்கள்; ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம்

85

 

இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம்
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் முறையின் மூலம் பெருமளவானோர் தொழில் வாய்ப்புகளை பெற்றனர்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த முறைமை செயற்படுத்தப்படாமை காரணமாக, ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த விசேட நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி, மீண்டும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE