பயங்கர விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை- வெண்டிலேட்டர் சிகிச்சையில் பிரபலம், தற்போதைய நிலை

76

 

தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொங்கி எழு மனோகரா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அருந்ததி நாயர்.

விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இறுதியாக தமிழில் ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தில் நடித்தார்.

விபத்தில் சிக்கிய நடிகை
இந்த நிலையில் நடிகை அருந்ததி நாயர் கோவளம் அருகே ஒரு பைக் விபத்தில் சிக்கி தற்போது தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் அருந்ததியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதாக அவருடைய தோழி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் அளித்துள்ளார்.

SHARE