காரா இல்லை சொகுசு கப்பலா.! புதிய Lexus LM 350H காரின் விலை என்ன தெரியுமா?

124

 

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ் தனது பிரபலமான சொகுசு MPV கார் Lexus LM 350H ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Lexus LM 350H என்பது Lexus-இன் flagship MPV model ஆகும்.

Lexus LM 350H விலை?
Lexus LM 350H ஐ இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு வகைகளும் ஏழு இருக்கைகள் மற்றும் நான்கு இருக்கைகள் என கிடைக்கும்.

இந்த காரின் விலை ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Toyota Vellfire-இலிருந்து உருவாக்கப்பட்ட Lexus LM 350 H, GA-K modular platform-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரிய spindle grille, sleek LED headlamps, புதுமையான fog lamps, ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஆடம்பர உணர்வை வெளிப்படுத்தும் அம்சங்கள் இதில் நிறைந்துள்ளது.

Lexus LM 350H என்ற பெயரில் LM என்பது Luxury Mover என்பதைக் குறிக்கிறது. நான்கு இருக்கைகள் கொண்ட வேரியண்ட் பிரீமியம் வசதிகளுடன் வருகிறது.

முக்கியமாக முன் மற்றும் பின் பயணிகளுக்கு, aircraft recliner seats, 23-speaker surround sound system, fold out tablet, heated arm rests மற்றும் USB portsகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் – ஹைப்ரிட் எஞ்சின் (246 bhp power, 239 Nm torque) e-CVT automatic transmission, nickel metal hydride battery, ll wheel drive system, control on various terrains உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

தொடர்ச்சியான சவாரி தரத்திற்கான adaptive suspension system, பயணிகளின் விருப்பத்திற்கேற்ப சென்சார் அடிப்படையிலான climate control, பயணிகளின் மன அமைதிக்காக Lexus safety system + 3 Adas suite ஆகியவை அம்சங்களில் அடங்கும்.

Lexus கடந்த ஆண்டு முன்பதிவு செய்தவர்களுக்கு அதன் Lexus LM 350H ஐ வழங்கும். இது Mercedes May Back GLS மற்றும் Bentley Bentayga போன்ற கார்களுடன் போட்டியிடும்.

Lexus LM 350H இந்தியாவில் எம்பிவி பிரிவின் தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE