நேற்றைய தினம் லெவ் ஷெய்னின் அவர்களின் “புலனாய்வாளரின் குறிப்புகள்” என்னும் நூல் படித்தேன்.
இது ரஸ்ய புலனாய்வாளர் ஒருவரின் குறிப்புகள். அவர் குறிப்பிடுகின்றார் “ புலனாய்வாளன் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தின் ஆழத்திலும் புகுந்து பார்க்க வேண்டும். ஆகவேதான் ஒரு புலனாய்வாளனுக்கும் ஓர் எழுத்தாளனுக்கும் இடையே பொதுவானவை அதிகம் இருக்கின்றன.”
எம் இனத்திலும் ஒரு பெருமைப்படக்கூடிய புலனாய்வாளர் இருந்தார். அவருடைய குறிப்புகள் ஒரு நூலாக வர வேண்டும்.
அவர் வன்னிக் காட்டுக்குள் இருந்துகொண்டு எப்படி இந்திய புலனாய்வு அமைப்புகளின் சதித்திட்டங்களை முறியடித்தார் என்பதை மக்கள் அறிய வேண்டும்.
அவர் எந்த புலனாய்வு கல்லூரியிலும் பயிலவில்லை. அதி சிறந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத நிலையிலும் அவர் எப்படி அந்த சாதனைகளை புரிந்தார் என்பதை அடுத்த சந்ததியினர் அறிய வேண்டும்.
இப்போது அவரது பேச்சுக்கள் , எழுத்துக்கள் ஒரு நூலாக வந்துள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. விரைவில் படித்துவிட்டு என் கருத்தை பகிர்வேன்.